“டாட்டூ பொப்பிங் டொஃபி ”: பாடசாலையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் டொபி குறித்து எச்சரிக்கை !

Date:

பாடசாலை மாணவர்களிடையே பரவலாகப் பரவி வரும் வெளிநாட்டு வகை டொஃபி குறித்து வாட்ஸ்அப் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வருகின்ற போதிலும், அதில் போதைப்பொருள் கலந்ததாக எந்த தகவலும் இல்லை என தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

“டாட்டூ பொப்பிங் டொஃபி ” எனப்படும் வெளிநாட்டு வகை டொஃபியில் போதைப்பொருள் இருப்பதாகவும், அதை பாடசாலை மாணவர்களிடையே பரப்பும் நோக்கில் பாடசாலைகளைச் சுற்றியுள்ள கடைகளிலும், பாடசாலைகளிலும் விற்கப்படுவதாகவும் வாட்ஸ்அப் சமூக வலைதளங்களில் புகைப்படங்களும் செய்திகளும் பரிமாறப்படுகின்றன.

இந்த வகை டொஃபியை வாயில் போட்டவுடன் வெடிக்கும் என்றும், அதில் குழந்தைகளை மயங்க வைக்கும் ஒரு வகையான பவுடர் இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் ஊடகப் பேச்சாளர் கல்வி மற்றும் தகவல் உத்தியோகத்தர் சாமர கருணாரத்ன தெரிவிக்கையில்,

இவ்வாறான டொஃபி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் ஆனால் அதில் ஆபத்தான மருந்துகள் எதுவும் இருப்பதாக அறியப்படவில்லை எனவும் எவ்வாறாயினும், இது தொடர்பில் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வகை டொஃபியில் அதிக அமிலத்தன்மை மற்றும் கார்பனேட் உள்ளடக்கம் காரணமாக, குழந்தைகளின் மென்மையான திசுக்கள் மற்றும் வயிற்றில் சேதத்தை ஏற்படுத்தும் என்று அபாயகரமான மருந்துகளுக்கான தேசிய வாரியம் சுட்டிக்காட்டுகிறது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...