தாய்வான் – ஹுவாலியன் நாட்டில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாகவும் ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் மியாகோஜிமா தீவு உட்பட அந்த பிராந்தியத்தில் உள்ள தொலைதூர தீவுகளுக்கு எல்லாம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானிய தீவுகளுக்கு மூன்று மீட்டர் (10 அடி) உயரத்திற்கு சுனாமி அலைகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் தாய்வானின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஹுவாலியன் நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுவதுள்ள நிலையில் மக்கள் உள்ளே சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்ச்சி தரும் வீடியோக்கள் பல வெளியாகி உள்ளன. அங்கே நிலப்பகுதிகள், பாலங்கள், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
ஆரம்ப நிலநடுக்கம் தைவான் முழுவதும் உணரப்பட்டது. மக்கள் பலரும் தெற்கு பிங்டுங் கவுண்டியில் இருந்து தைபேயின் வடக்கு வரை வலுவான நடுக்கம் ஏற்பட்டதாக புகாரளித்தனர். தைபேயின் வானிலை ஏஜென்சியின் கூற்றுப்படி, ஹுவாலியன் அருகே 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை உள்ளடக்கிய பின்அதிர்வுகள் உணரப்பட்டன.
அதாவது ஒரு நிலநடுக்கத்திற்கு பின் ஏற்படும் தொடர் நடுக்கங்கள் அங்கே உணரப்பட்டது.அங்கே உணரப்பட்ட நிலநடுக்கங்களில் மிக மிக வலுவான நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.
இதனால் பலி எண்ணிக்கை எத்தனை என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 100 கணக்கில் கட்டிடங்கள் குலுங்கின, 20 கட்டிடங்கள் வரை முதல் கட்டமாக சேதம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.