துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது.
அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் ஏறத்தாழ 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கோர விபத்தில் ஏறத்தாழ 13 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 7 பேர் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக கூறப்பட்டு உள்ளது. பெஸ்கிடாஸ் மாவட்டத்தில் உள்ள இந்த இரவு நேர கேளிக்கை விடுதி 16 மாடி கட்டடத்தின் தரைதளத்தில் அமைந்து உள்ளது.
புனரமைப்பு பணிகளுக்காக விடுதி மூடப்பட்டு இருந்த நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் அதுகுறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மேலும், இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக சிலரை தடுப்பு காவலில் வைத்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.