தேர்தலை நடாத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கிய தேசப்பிரிய!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது இல்லத்திற்கு முன்பாக அவர் தனிமனித போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் அவரது இல்லத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வேட்புமனுத் தாக்கல் செய்து தேர்தலை தாமதப்படுத்துவது எதேச்சாதிகாரத்துக்குச் சமமானது. அரசாங்கத்தின் செல்வாக்கு காரணமாகவே உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவிர்த்து அதிகாரிகள் ஆட்சி புரிவது மக்களின் உரிமைகளை மீறும் செயல் என பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் பங்களாதேஷ் இஸ்லாமிய அறிஞர் முப்தி நஸ்ருல்லா அல் பத்ர் மரணம்.

சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு ஹூதி...

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த துருக்கி தடை: நவம்பர் 1 முதல் அமல்!

15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குப் புதிய தடையை துருக்கி...

இயல்பாக்க வலை’ (Normalization Trap): சவுதி அரேபியாவைச் சுற்றியுள்ள பிராந்திய அரசியல் சவால்களும் ஆபத்துகளும்!

யேமன் விவகாரத்தில் சவுதி அரேபியாவின் தற்போதைய நிலைப்பாடு, ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள்...

சாமர சம்பத் எம்.பி. இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தஸ்ஸநாயக்க, இன்று (12) லஞ்சம் அல்லது...