பண்டிகை கால மோசடிகள்: பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!

Date:

பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள் மோசடியாளர்கள் மற்றும் மோசடி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் மக்கள் சுற்றுலா செல்ல வேண்டிய விதம் குறித்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கமளித்தார்.

இதனடிப்படையில், சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, பலர் தங்கள் உறவினர்களைப் பார்க்கச் செல்கிறார்கள், அவர்கள் கிராமங்களுக்குச் செல்கிறார்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க.

அவ்வாறு இந்த விடுமுறைக் காலத்தில் பயணம் செல்லும் போது சில விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

பயணம் செய்யும் வாகனங்கள் தனியார் வாகனங்களாகவோ அல்லது பொது வாகனங்களாகவோ இருக்கலாம்.

தனிப்பட்ட வாகனமாக இருந்தால் உங்கள் வாகனத்தை செலுத்துபவர் மது அருந்தினாரா?, அதிவேகமாக பயணிக்கிறாரா?, மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுகிறாரா? என்பதை அவதானியுங்கள்.

அவ்வாறு செயற்படின் அதற்கு எதிராக குரல் கொடுக்க முடியும். பொது போக்குவரத்தின் போதும் இவற்றை அவதானியுங்கள்.

நெடுஞ்சாலையில் இதுபோன்று நடந்தால் 1969 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவியுங்கள்.

பொலிஸார் இதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்” என்றார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...