பஸ் கட்டணம் குறையுமா? பஸ் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்

Date:

லங்கா ஆட்டோ டீசலின் விலையில் திருத்தம் செய்யப்படாததால், தற்போதைக்கு பஸ் கட்டண திருத்தம் குறித்து பரிசீலிக்க முடியாது.

ஆனால் லங்கா சுப்பர் டீசலின் விலைகள் மேலும் குறையும் பட்சத்தில், இதனைப் பேருந்துகள் பயன்படுத்துவதற்கு முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும், தற்போதைய டீசல் விலை அதிகரிப்பு 4% ஐ தாண்டவில்லை. லங்கா ஆட்டோ டீசல் விலை 28 ரூபாவால் உயர்த்தப்பட்ட போதும் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

“பஸ் கட்டண திருத்தம் தொடர்பான தேசிய கொள்கை ஜூலையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க சங்கம் எதிர்பார்க்கிறது . இந்த முடிவு நடைமுறையில் உள்ள டொலர் விலை மற்றும் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு மற்றும் பஸ் பாகங்கள், பழுதுபார்ப்பு, உதிரி பாகங்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...