புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு முன்னேறும்: ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து

Date:

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும் எனவும் புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் மற்றும் உலகம் என்பன முன்னேற முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும். புதிய வருடம் பிறத்தல், புதிய நாட்காட்டி, பருவத்திற்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன.

இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது.அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும் என தெரிவித்துள்ளார்.

புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...