புத்தளம் காதி நீதிபதி முஹம்மத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

Date:

புத்தளம் மாவட்டத்தில் காதி நீதிபதியாக செயற்பட்டுவந்த முஹம்மத் காதியார்  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யட்டார்.

இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் உறுதிப்படுத்தினார்.

விவாகரத்து வழக்கு தொடர்பில் 5000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதற்கமைய அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

புத்தளம் காதி நீதிபதியின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்வேறு விடயங்களை கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி  வெளியிட்டிருந்தார்.

பலரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கமைய தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

புத்தளம் காதி நீதிமன்றத்தின் காதியார் பொறுப்பை ஏற்ற அன்றே நீதிக்கு தீர்ப்பு என்ற நடப்பு மாறி நிதிக்கு தீர்ப்பு என்று கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...