பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!

Date:

தொலைதூரப் பஸ்கள் அல்லது புகையிரதங்களில் பயணிப்பவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

நீண்ட தூர பயணிகளின் பெறுமதியான பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சாதாரண பயணிகளைப் போல நீண்ட தூரப் பேருந்துகளில் ஏறி பயணிகளின் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து வருகின்றனர்.

எனவே, பயணிகள், பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பதுளை – கொழும்பு தொலைதூரப் பேருந்துகளில் இந்த திருட்டுச் சம்பவங்கள் அதிகம் இடம்பெறுவதாகவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...