மாலைதீவு நாடாளுமன்ற தேர்தல்: ஜனாதிபதி முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி

Date:

நடைபெற்று முடிந்த மாலைதீவின் 20 ஆவது  நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் ஜனாதிபதியான முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற  குறித்த தேர்தலில் ஜனாதிபதி முய்சுவின் கட்சியான   மக்கள் தேசிய காங்கிரஸ் மொத்தமுள்ள 93 தொகுதிகளில் 66 இடங்களை வென்றுள்ளது.

இது நாடாளுமன்றத்தில் 3-இல் 2 பங்காகும். இந்த வெற்றியைத் தொடர்ந்து முய்சு தனது சீன ஆதரவு செயற்பாடுகளை அதிகரிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தலுக்கு முன்பு முய்சுவின் பிஎன்சி கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்ந்தே வெறும் 8 எம்பிக்கள் மட்டுமே இருந்தார்கள். இதனால் அவரால் விரும்பிய சட்டங்களை எளிதாகக் கொண்டு வர முடியவில்லை.

முகம்மது முய்சு எதாவது சட்டத்தைக் கொண்டு வர முயன்றால் நாடாளுமன்றத்தில் முறியடிக்கப்பட்டு வந்தது.

தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்துள்ளதால், முகம்மது முய்சு நினைத்த சட்டங்களை நிறைவேற்ற முடியும்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...