முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோர நடவடிக்கை: அமைச்சர் ஜீவன்

Date:

கொரோனா பரவலின்போது கட்டாய தகனம் செய்தமைக்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டு அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சம்பிரதாய மன்னிப்பு கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட பல விஞ்ஞான கருத்துக்களை நிராகரித்து இந்த நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் தலைமையிலான ஆய்வு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நீர் தொழில்நுட்ப ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்க மையத்தின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் முந்தைய அரசாங்கத்தின் நிலைப்பாடு இப்போது சவாலுக்கு உட்படுத்தப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...