ஷவ்வால் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று!

Date:

ஹிஜ்ரி 1445 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை (நோன்புப் பெருநாளை) தீர்மானிக்கும் மாநாடு இன்று 09ஆம் திகதி கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

 

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தலைவர் கலீபதுல் குலபா மௌலவி எம்.பி.எம் ஹிஷாம் பத்தாஹி தலைமையில் இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றவுள்ள இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.ரிஸ்வி முப்தி, முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

இதுதவிர, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிறைக்குழு உறுப்பினர்கள், மேமன் சங்க பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா ஷரிஆ கவுன்சில் பிரதிநிதிகள், பள்ளிவாசல் கதீப்மார்கள், பேஷ் இமாம்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிறை தென்பட்டால் பூரண ஆதாரத்துடன் 0112432110, 0112451245, 0777353789 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.

Popular

More like this
Related

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...