புத்தாண்டை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 126 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளிலே குறித்த தொகை வருமானம் கிடைத்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 366,000 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் ஊடாக பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது