காஸாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷி ஃபா மருத்துவமனையில் 2 வாரங்கள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு அங்கிருந்து இஸ்ரேல் படையினா் நேற்று வெளியேறினா்.
அந்த நடவடிக்கை வெற்றியடைந்ததாக இராணுவம் கூறினாலும், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரை மருத்துவமனையில் இஸ்ரேல் வீரா்கள் படுகொலை செய்ததாக சா்வதேச அமைப்புகள் குற்றஞ்சா ட்டியுள்ளன.
மேலும், இந்த 2 வாரங்களில் காஸாவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த
அந்த மருத்துவமனை பயன்படுத்த முடியாத அளவுக்கு உருக்குலைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து இஸ்ரேல் இராணுவத்தின் தலைமை செய்தித் தொடா்பாளா் டேனியா் ஹகாரி கூறியதாவது,
காஸா சிட்டியிலுள்ள அல்-ஷி ஃபா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வந்த இராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது. அதையடுத்து, இஸ்ரேல் படையினா் அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டனா்.
அந்த மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினரும், மற்ற மதவாத ஆயுதக் குழுக்களும் தங்களது வடக்குப் பகுதி தலைமையகமாகப் பயன்படுத்தி வந்தனா்.
அவா்களுடன் மருத்துவமனைக்குள் நேருக்கு நோ் மோதவேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் பதுங்குமிடங்களை அமைத்துக்கொண்ட சில
ஆயுதக் குழுவினா் அங்கிருந்தபடி சண்டையிட்டனா்.
சிலா் மருத்துவமனைக்குள்ளிருந்த படியே இஸ்ரேல் படையினா் மீது குண்டுகள் வீசித் தாக்கினர். இதனால் தான் மருத்துவமனைக்கு சேதம் ஏற்பட்டது.
எனினும் இஸ்ரேல் தாக்குதலில் பல நோயாளிகள் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அமைப்பி ன் பொது இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ்
வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், ‘இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையால்
அல்-ஷி ஃபா மருத்துவமனையில் பொதுமக்கள் கொல்லப்பட்டனா்.
அந்த மருத்துவமனையில் இன்னும் 100 நோயாளிகள் உள்ளனா். அவா்களில் 28 பேரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்
இது குறித்து சா்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கத்தின் பலஸ்தீன பிரிவுக்கான செய்தித் தொடா்பாளா் ரயீத் அல்-நிம்ஸ் கூறுகையில், ‘அல்-ஷி ஃபா
மருத்துவமனையின் நிலவரம் மிக மோசமாக உள்ளது.
அங்குள்ள மருத்துவப் பணியாளா்களில் சிலா் கொல்லப்பட்டுள்ளனா். சிலா்
துன்புறுத்தப்பட்டுள்ளனா் சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். அத்துடன், இஸ்ரேல் படையினா் முற்றுகையிட்டிருந்த இந்த 2 வாரங்களில் மருந்துப் பொருள்கள் மட்டுமின்றி , உணவு, குடிநீரை கூட இஸ்ரேல் படையினா் மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை.
இந்த நடவடிக்கையின்போது மருத்துவா்கள், செவிலியா், மருத்துவமனை பணியாளா்கள் உள்ளிட்ட பொது மக்களை இஸ்ரேல் படையினா் படுகொலை செய்ததாக அங்கிருந்தவா்கள் கூறினா் ’ என்றாா்.
ஹமாஸ் அமைப்பினா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அல்-ஷி ஃபா மருத்துவமனைக்குள் சுமாா் 400 பேரை இஸ்ரேல் படையினா் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தகவல்களை நடுநிலை ஊடகங்களால் உறுதிப்படுத்த
முடியவில்லை. காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி
நுழைந்த ஹமாஸ் படையினா் சுமாா் 1,160 பேரை படுகொலை செய்தனா். உயிரிழந்தவா்களில் மிகப் பெரும்பாலானவா்கள் பொதுமக்கள்.
இது தவிர, இஸ்ரேலில் இருந்து சுமாா் 250 பேரை ஹமாஸ் அமைப்பினா்
பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
அவா்களில் சுமாா் 130 போ் இன்னும் ஹமாஸ் பிடியில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸா பகுதியில் இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது.
பின்னா் தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி முன்னேறி வந்த இராணுவம், காஸா
சிட்டியைக் கைப்பற்றி அல்-ஷி ஃபா மருத்துவமனைக்குள்ளும் நுழைந்தது. இதற்கு
உலகம் முழுவதும் பல்வே று தரப்பினா் கண்டனம் தெரிவித்தனா்.
இந்த நிலையில், அதே மருத்துவமனையைக் குறிவைத்து இஸ்ரேல் தற்போது
கடந்த மாதம் 18- மீண்டும் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
காஸாபகுதியில் இஸ்ரே ல் கடந்த 178 நா ள்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32,845-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 75,392 போ் காயமடைந்துள்ளனா்
என்று அந்த அறி க்கை யில் தெ ரி வி க்கப்பட்டுள்ளது