ஈத் அல்-பித்ர் திருநாள் மன்னிப்பு, அன்பு மற்றும் இரக்கத்திற்கான நாளாகும்: இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

Date:

அருள் நிறைந்த ஈதுல் பித்ர் திருநாளில் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.

ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈத் அல்-பித்ர் திருநாள் என்பது மன்னிப்பு, அன்பு மற்றும் இரக்கத்திற்கான நாளாகும். இக்குணாதிசயங்கள்தான் இஸ்லாத்தின் அடிப்படை.

ஈத் என்பது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் நாள் அயலவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் சமாதானம் பேணவேண்டிய நாள்.

இந்த மங்களகரமான சந்தர்ப்பம், உறவுமுறை, சமாதானம் ஆகியவற்றின் பிணைப்பை புத்துயிர் பெறச்செய்வதற்கும், ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மை மற்றும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கிறது.

இந்த நன்நாள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

Popular

More like this
Related

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...