ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் பொருளாதாரம், வர்த்தக, ஒத்துழைப்பிற்கானதாக இருக்கட்டும்..!

Date:

குறிப்பு: ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரானினால் இந்த நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்து வைப்பதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இராஜாங்க மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் அதேபோன்று முஸ்லிம் சமூக மட்டத்திலும் கூட வித்தியாசமான கருத்துக்கள் கலந்துரையாடல்கள் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்று வருகின்றன.

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணத்தை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் உற்றுநோக்கியுள்ளன.

இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தும் சக்தியாகவுள்ள அமெரிக்காவுக்கு ஈரான் ஜனாதிபதியின் விஜயம் குறித்து திருப்தியில்லையென இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இதேவேளை உலகின் பலம் வாய்ந்த ஷீஆ நாடான ஈரானின் தலைமை இலங்கைக்கு வருவது குறித்து முஸ்லிம்கள் மத்தியிலும் பல சலசலப்பான கருத்துக்ள் முன்வைக்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அந்தவகையில் அதுதொடர்பாக  வாசகர் ஒருவர் தன்னுடைய முகநூல் வாயிலாக எழுதியுள்ள ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் 24ம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்ற தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஈரானின் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்வது இது முதற்தடவையல்ல.

எனினும் இப்ராஹிம் ரைசி ஜனாதிபதி என்ற வரையரையையும் தாண்டி ஈரானின் ஆன்மிக தலைவராக (Supreme Leader) பார்க்கப்படுவதும், மதத்தலைவர் அந்தஸ்த்து வழங்கப்படுவதுமே இங்குள்ள முக்கிய விடயமாகும்.

அண்மைய நாட்களில் இலங்கையிலும், சுப்ரீம் தலைவர்களும், அமைப்புக்களும் உருவெடுத்திருப்பதானது வழிகெட்ட ஷீஆ கொள்கையின் தாக்கமோ என்று அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதை பலரும் நன்கறிவர்.

எனவே இப்ராஹிம் ரைசியின் விஜயத்திற்கு மதச்சாயமோ, ஆன்மிகச் சாயமோ பூசப்படாமல், இரு நாடுகளுக்கிடையிலான ராஜதந்திர, அரசியல் விவகாரமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.

நபித்தோழர்களையும், உம்மகாதுல் முஃமினீன்களையும் மிக மோசமான, கீழ்தரமான வார்த்தைகளைக் கொண்டு திட்டித்தீர்க்கும் வழிகெட்ட ஷீஆ அமைப்பினர் அன்மைய நாட்களில் ஈரான் அரசின் உதவியால் மத்ரஸாக்களும், ஈரானுக்கான சுற்றுலாக்களும், ஏன் பல்கலைக்கழகமொன்றையும் நிறுவி தங்களது வழிகெட்ட, தூய அகீதாவிற்கெதிரான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருவதை அனைவரும் நன்கறிவோம்.

அஹ்லுல் பைத்களை (நபியவர்களின் குடும்ப உறவுகளை) மதிக்கின்றோம் என்ற பெயரில் நபியவர்களின் எல்லா உறவுகளையும் தூக்கியெறிந்துவிட்டு ஹுஸைன் ரழியல்லா அன்ஹு அவர்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதும், அவரது சகோதரர் ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை இரண்டாம் தரமாக பார்க்கப்படுவதன் பின்னணியையும் அறிந்தாக வேண்டும்.

நபியவர்களின் புதல்விகளான ஸைனப், ருகைய்யா, உம்மு குல்ஸும் ரழியல்லாஹு அன்ஹுன்ன போன்றவர்களும் அவர்களது புதல்வர்களும் புறக்கணிக்கப்படுதும், மதிக்கப்படாததும், ஆபூபக்கர் மற்றும் உமர் ரழியல்லாஹுஅன்ஹுமா போன்ற நபியவர்களின் உன்ன தோழர்கள் அவமதிக்கப்படுவதும், அன்னை ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் வர்ணிப்பதும் நபியவர்களையும், அஹ்லுல் பைத்களையும், நபித்தோழர்களையும் உளமார நேசிக்கும் அனைவருக்கும் பொறுத்துக் கொள்ள முடியாத படுபாதக செயலாக இருக்கிறது.
மேலும் இப்பாதகச் செயல் தூய இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் செயல் என்பது எல்லா அறிஞர்களாலும் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுமாகும்.
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் என்பதை தாண்டி இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் என்ற அன்மைய போர் கூட ஈரானின் தேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாக சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த பல தசாப்தங்களாக இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து நீக்கிவிடுவோம் என்ற கர்ஜனையை ஈரான் கூறிவருவது ஒன்றும் புதிதல்ல.

சுமார் 40 ஆயிரம் உயிர்கள் கொல்லப்பட்டும், 70 ஆயிரத்திற்குமதிகமானோர் நிரந்தர அங்கவீனர்களாக்கப்பட்டும், பல லட்சம் பேர் தங்களது இருப்பிடங்களை இழந்து நிர்க்கதியான நிலையிலும், காஸாவின் பெரும்பாலான பகுதிகள் மக்பராவாக மாற்றப்பட்டும் இருக்கின்ற இந்த சூழ்நிலை போதாதா இஸ்ரேலை அழிப்பதற்கு.
குறிப்பாக ஈரானின் படைத் தலைவர்கள் தூதுவராலயங்கள் அழிக்கப்பட்ட போதும் அமைதியாக இருப்பது ஈரானின் இரட்டை நிலைப்பாட்டை புரிந்து கொள்ளப் போதுமானதாகும்.
எனவே ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கைக்கான விஜயம் இருதரப்பினதும் ராஜதந்திர, மற்றும் பொருளாதார மேம்பாடு, வர்த்தக, வாணிப ஒத்துழைப்பிற்கானதாக இருக்கட்டும்.

சமய மற்றும் ஆன்மிக செயல்பாடுகளுக்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கு போதுமான அமைப்புக்கள், தெளிவான அகீதா என்பனவும் அதற்கான வழிகாட்டல்களும் எம்மிடம் தாரளமாக இருக்கின்றன.

துளிர்விடத் துடிக்கும் ஷீஆ அமைப்புக்களும், ஆதரவாளர்களும், ஷீஆ சிந்தனையை உள்வாங்கி பசுந்தோல் போர்த்திய புலி போல் வேஷமிட்டிருப்பவர்களும் நிதானமாக சிந்தித்து வழிகெட்ட ராபிழாக்களின் சிந்தனையிலும் செயல்வடிவங்களிலிருந்தும் வெளிவாருங்கள்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...