ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம் – அமெரிக்கா எச்சரிக்கை!

Date:

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குறுகிய காலத்தில் இஸ்ரேலை தாக்க ஈரான் முயற்சிக்கும்’ என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கசில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் துாதரகமும் சேதமடைந்தது. இரண்டு இராணுவ தளபதிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர்.இது குறித்து ஜோ பைடன் கூறியிருப்பதாவது: சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குறுகிய காலத்தில் இஸ்ரேலை தாக்க ஈரான் முயற்சிக்கும். இந்த தருணத்தில் ஈரானுக்கான தன்னுடைய செய்தி, போர் வேண்டாம். இஸ்ரேலுக்கு நாங்கள் ஆதரவை வழங்குவோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு நாங்கள் உதவுவோம். ஈரான் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...