ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விவாதம் நடத்த மட்டும் நாடாளுமன்ற கூட்டத்துக்கு 13 கோடிக்கும் மேல் செலவு!

Date:

”கடந்த மூன்று ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மட்டும் 11 விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய விவாதத்துக்காக 11 நாட்கள் நடைபெற்ற கூட்டத்துக்காக 13 கோடியே இருபது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே விடயம் தொடர்பில் அதிகளவான விவாதங்கள் இடம்பெற்றமை இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி விவாதங்கள் மே 7, 8, 10, 2019 மற்றும் மார்ச் 10, 25, 26, 2021, ஏப்ரல் 7, 8, 9 மற்றும் செப்டம்பர் 21 மற்றும் 22, 2023 ஆகிய திகதிகளில் நடைபெற்றன.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மற்றொரு மூன்று நாள் விவாதம் இந்த ஆண்டு ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய திகளில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...