உன்னிப்பாக நோட்டம் விட்ட இஸ்ரேலின் மொசட் அமைப்பு: ஈரானின் தாக்குதலை முறியடிக்க பெரிய விலை கொடுத்த இஸ்ரேல்!

Date:

நேற்றிரவு ஈரான் ராணுவம் இஸ்ரேலின் பாதுகாப்பு படை தளத்தின் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை தொடர்ந்தது.

இதனை சமாளிக்க இஸ்ரேல் சுமார் 1.35 பில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தற்போதைய தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்த ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் நேற்று தாக்குதலை தொடுத்திருக்கிறது.

நேற்று இரவு மட்டும் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

இதில் 99%-ஐ இஸ்ரேல் அழித்துவிட்டது. ஒரு சில ஏவுகணைகள் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் இஸ்ரேல் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியிருக்கிறது. இருப்பினும் இதற்காக இஸ்ரேல் பெரிய விலையை கொடுத்திருக்கிறது.

அதாவது, ஈரானின் தாக்குதலை அமெரிக்கா தொடக்கம் முதலே மோப்பம் பிடித்து வந்தது. ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை உலகின் மிகவும் சக்தி வாய்ந்த உளவு அமைப்பு என்று சொல்லிக்கொள்ளும், இஸ்ரேலின் மொசாட் முன்கூட்டியே கணிக்க தவறிவிட்டது.

எனவே ஈரான் தாக்குதலையும் கணிக்க தவற விடக்கூடாது என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கண்களில் விளக்கு எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு நோட்டம் விட்டு வந்தன.

எதிர்பார்த்தபடி நேற்றிரவு ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளது. உடன் ட்ரோன்களையும், சூப்பர் சோனிக் ஏவுகணையையும் ஏவியது. இது எதிர்பார்த்ததை விட கொஞ்சம் தீவிர தாக்குதல்தான்.

இருப்பினும் சமாளிக்க முடியாதது அல்ல என்பதை இஸ்ரேல் உணர்ந்துக்கொண்டது. ஏற்கெனவே இருக்கும் அயன் டோம் பாதுகாப்பு அம்சத்துடன் கூடுதலாக அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு கருவிகளை கொண்டு இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொண்டது.

அதேபோல சைப்ரஸ் தீவிலிருந்த பிரிட்டனின் கடற்படை போர் விமானங்கள், அமெரிக்காவின் போர் கப்பல், ஜோர்டன் மற்றும் சவுதி என ஏறத்தாழ 9 நாடுகள் ஈரானின் தாக்குதலை தடுத்திருக்கின்றன.

அதாவது ஈரான் vs 9 நாடுகள் களத்தில் இருக்கின்றன. இப்படியாக ஈரானின் தாக்குதலை தடுக்க இஸ்ரேல் நேற்றிரவு மட்டும் சுமார் 1.35 பில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மதிப்பில் இந்த தொகை 11,287 கோடி ரூபாயாகும்.

இதே நிலைமை நீடித்தால், அடுத்தடுத்த தாக்குதலை எதிர்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்படும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன் அர்த்தம், இஸ்ரேல் நிச்சயம் பெரிய தாக்குதலை

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...