உலகின் மிக வயதான மனிதர் என கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த, வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜூவான் வின்சென்ட் பெரெஸ் தனது 114 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு இவர் தனது 112 ஆவது வயதில் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை படைத்தார்.
வெனிசுலாவின் எல் கோப்ரே பகுதியில் 1909 ஆம் ஆண்டு பெரெஸ் மோரா மற்றும் எடெல்மிரா மோரா தம்பதியருக்கு 9வது குழந்தையாக பிறந்தார் ஜூவான் விசென்ட் மோரா. விவசாய குடும்பத்தை சேர்ந்த ஜுவான், தனது 34 வயதில் ஷெரிஃப்-ஆக பதவியேற்றார்.
உள்ளூரிலேயே கரும்பு மற்றும் காபி பயிரிட்டுவந்த ஜுவானின் குடும்பம், விவசாயத்தின் மீது அதிக பற்று கொண்டிருந்தது. ஆகவே, பின்னாளில் ஜூவானும் விவசாயத்தில் ஈடுபட்டார். தனது 104 வயது வரையிலும் விவசாய பணிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டுவந்த ஜுவான் அதன்பிறகு ஓய்வெடுக்க இருப்பதாக அறிவித்தார்.
அதிகமாக காபி குடிக்கும் வழக்கமுள்ள ஜுவான், குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடுவதையே அதிகம் விரும்புவதாக கூறுகிறார்.