ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சமத்துவ மக்கள் கட்சி சந்திப்பு: தேர்தலில் முஸ்லிம்களின் கடப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடல்

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பும், டாக்டர் யூசுபின் தலைமையிலான சமத்துவ மக்கள் முன்னணிக்குமிடையிலான விசேட சந்திப்பு வெள்ளிக்கிழமை (26) நிந்தவூரில் நடைபெற்றது.

இரு கட்சிகளும் இணைந்து எதிர்காலத்தில் கூட்டமைப்பை உருவாக்குவது பற்றி இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய கடப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில், இரு கட்சிகளதும் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...