ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது குறித்து ஷூரா சபையின் வேண்டுகோள்

Date:

புனித ரமழான் மாதத்தில், இரவு நேரங்களில் பல பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கிகளை அதிக ஒலி எழுப்பும் வகையில் பயன்படுத்துவதனால், அண்டை வீட்டார், குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்கள், குழந்தைகள் மற்றும் நோயுற்றவர்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய ஷுரா சபை விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
தொழுகைக்கான அழைப்பு தவிர அனைத்து நிகழ்ச்சிகளிலும் பள்ளிவாயில்களுக்கு சமூகம் தந்திருப்பர்களுக்கு மட்டுமே ஒலி கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ஒலி மாசுபாட்டின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, ஒலிபெருக்கிகளால் ஏற்படும் இடையூறுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறவர் தம் அண்டை வீட்டாரைத் தொந்தரவு செய்ய வேண்டாம். (புகாரி & முஸ்லிம்)
எனவே, இரவுத் வணக்கங்களின் போது அண்டை வீட்டாருக்கு இடையூறு ஏற்படாத வகையில் வெளிப்புற ஒலிபெருக்கிகளை பயன்படுத்துமாறு தேசிய ஷூரா சபை அனைத்து முஸ்லிம்களையும் வேண்டிக்கொள்கிறது.
நமது நோன்பு, பிரார்த்தனை மற்றும் நற்செயல்களை வல்லவன் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவனுடைய ஏராளமான கருணைகளை எங்களுக்கு வழங்கவும், இந்த புனிதமான மாதத்தில் எங்கள் எல்லா பாவங்களையும் மன்னிக்கவும் தேசிய ஷூரா சபை பிரார்த்திப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...