கல்முனை கல்வி வலயத்தால், காசா மக்களுக்கு 31 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை கையளிப்பு

Date:

கல்முனை வலயக் கல்வி அலுவலகம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

அதற்கமைய பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐந்நூறு ரூபா இன்று (22) கையளித்துள்ளது.

வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் குறித்த காசோலையினை கையளித்துள்ளார்.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் உட்பட கல்வி வலய உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

வலயக் கல்விப் பணிப்பாளரது வழிகாட்டலுக்கமைய கணக்காளரின் நெறிப்படுத்தலில் வலயக் கல்வி அலுவலக கல்விசார் மற்றும் கல்விசார ஊழியர்கள், அதிபர்களின் நிதிப்பங்களிப்புடன் இத்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜானாதிபதியின் ஆலோசனைக்கமைய வருடாந்தம் இடம்பெறும் இப்தார் நிகழ்வுக்கான செலவீனத்தை மட்டுப்படுத்தியே இந்த நிதி திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் தாக்குதலில் 34,049 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 76,901 பலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...