தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் தமது விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமாயின், ஏப்ரல் 11ஆம் திகதி முதல் ஏப்ரல் 17ஆம் திகதி நள்ளிரவு வரை மாத்திரம் அதற்கான அவகாசம் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.