காசாவில் தொண்டு நிறுவன பணியாளர்கள் பலி: ‘போரில் இதெல்லாம் நடக்கும்’ ; இஸ்ரேல் பிரதமர் விளக்கம்!: அமெரிக்கா கண்டனம்

Date:

மத்திய காசாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 5 பேர் பலியானார்கள்.

கார் மீது குண்டு வீசப்பட்டதில் அரசு சாரா தொண்டு நிறுவனமான வேர்ல்டு சென்ட்ரல் கிச்சான் அமைப்பின் வெளிநாட்டு பணியாளர்கள் உயிரிழந்தனர்.

இஸ்ரேல்- காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 6 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் அப்பாவி மக்கள் உள்பட 32 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் தொண்டு நிறுவன பணியாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தவறுதலாக தாக்குதல் நடத்தி விட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறும்போது,

“உதவிப் பணியாளர்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வு கடுமையான தவறு. சிக்கலான சூழ்நிலைகளில் தவறாக அடையாளம் காணப்பட்டதன் விளைவாக இது ஏற்பட்டுவிட்டது. இது நடந்திருக்கக் கூடாது. இது தொடர்பாக முழுமையான  விசாரணை நடத்தப்படும்” என்றார்.

இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, “இது ஒரு சோகமான சம்பவம். துரதிர்ஷ்டமானது மற்றும் மற்றும் திட்டமிடப்படாதது. ஆனால் போர் காலத்தில் இது போன்று நடக்கும்” என்றார்.

உதவி பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஸ்பெயினும் போலந்தும் இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க இஸ்ரேலை இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, பொதுமக்களைப் பாதுகாப்பதில் போதுமான நடவடிக்கையை இஸ்ரேல் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...