நல்லெண்ணம் மற்றும் கலாசார பரிமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், இரண்டு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களினால் பரிசாக வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்களை இலங்கைக்கான சவூதி தூதுவர் மேதகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி கொழும்பில் உள்ள பல பள்ளிவாசல்களுக்கு வழங்கி வைத்தார்.
பேரீச்சம்பழங்களை விநியோகிப்பதில் தூதுவரின் தனிப்பட்ட ஈடுபாடு, இந்த நல்லெண்ணச் செயலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.
ஜாவத்தை பள்ளிவாசல், கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல், வெள்ளவத்தை பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், சிவப்புப் பள்ளிவாசல் மற்றும் ஸாஹிரா பள்ளிவாசல் ஆகியற்றுக்கு சவூதி தூதுவர் பேரீச்சம்பழங்களை வழங்கி வைத்தார்.