கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள்: ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு

Date:

ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால்  அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் கொழும்புக்கு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாள் செயலமர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை செயற்படுத்துவதுவதற்கு போதிய தெளிவுப்படுத்தல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்காக தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் தொடர்பில் சர்வதேச அனுபவம் கொண்ட விசேட நிபுணர்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜூலை மாத இறுதியில் அல்லது ஒகஸ்ட் மாத முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கும் இடையேயான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...