கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உலர் உணவுப் பொருட்கள் தரமற்றவை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் நோயாளிகளின் உணவுக்காக வழங்கப்படும் மரக்கறிகள் அழுகிய நிலையில் இருப்பதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேநீரைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பால்மா மற்றும் சீனியும் காலாவதியானவை எனவும், சில நேரங்களில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் தொழிலாளர்களின் உணவுக்கு தகுதியற்ற மீன்களைக் கொண்டு உணவு சமைப்பதாகவும், இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு பல தடவை கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திய போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த நிறுவனத்திற்கு உலர் உணவுக்காக மாதாந்தம் 76 மில்லியனும், மீனுக்காக 15 மில்லியனும் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.