சட்டமூலங்கள் சிலவற்றை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!

Date:

அண்மைக் காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் சிலவற்றை நேற்றையதினம் (01) சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02)சபையில் அறிவித்தார்.

பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள், ஆவணங்களைப் பதிவுசெய்தல் (திருத்தம்), நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தம்), ஈடு (திருத்தம்), நிதிக் குத்தகைக்கு விடுதல் (திருத்தம்), உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தம்) மற்றும் கம்பனிகள் (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களையே சான்றுரைப் படுத்தியிருப்பதாக அவர் அறிவித்தார்.

இதற்கமைய, குறிப்பிட்ட சட்டமூலங்கள் 2024ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டம், 2024ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஆவணங்களைப் பதிவுசெய்தல் (திருத்த) சட்டம், 2024ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்த) சட்டம், 2024ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க ஈடு (திருத்த) சட்டம், 2024ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க நிதிக் குத்தகைக்கு விடுத்தல் (திருத்த) சட்டம், 2024ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்த) சட்டம் மற்றும் 2024ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க கம்பனிகள் (திருத்த) சட்டம் எனும் பெயரில் நேற்று (01) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...