மத்திய கிழக்கில் முடிவில்லாத வன்முறையை முறியடிக்கும் ஒரே நம்பிக்கை பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் வன்முறையை இல்லாமலாக்கி நல்ல சூழ்நிலையை உருவாக்க உரிய வழி சுதந்திர பலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்வதாகும், இஸ்ரேல் உடனடியாக தன்னுடைய எல்லா இராணுவ நடவகைகளின் போதும் பொது மக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ரபாவை தரைமார்க்கமாக தாக்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.