சுற்றுலா பயணிக்கு வடை, தேநீரை 800 ரூபாவுக்கு விற்றவர் நீதிமன்றில்!

Date:

களுத்துறை உணவகம் ஒன்றில் வெளிநாட்டுப் சுற்றுலா பயணி ஒருவருக்கு ‘வடையும் ஒரு சாதாரண தேநீரும்’ 800 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் இன்று (18) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதற்கமைய அவர், களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றூலாப் பயணி ஒருவருக்கு குறித்த சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார். இதனையடுத்து குறித்த சுற்றுலாப் பயணி அது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் வடையை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை வழக்கு தொடர்ந்துள்ளது

பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...