ஜனாதிபதி நிதியத்தினால் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்!

Date:

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகையை 2024 மே முதல் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

அதன்படி மார்ச் முதல் அமுலுக்கு வரும் வகையில் மாதாந்தம் 6000 ரூபாய் வீதம் 24 தவணைகளுக்கு இந்த புலமைப்பரிசில் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல்கள் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsfund.gov.lk இல், அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியல்களைப் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வீதம் 12 மாதாங்கள் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Popular

More like this
Related

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...