தேர்தலை இலக்குவைத்து மொட்டுக்கட்சியின் புதிய வேலைத்திட்டங்கள்: பிரமாண்ட மே தினத்துக்கு ஏற்பாடு

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கீழ்மட்டத்திலிருந்து பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சியை வலுப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வீடுகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

”எதிர்வரும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்கும் வகையில் கட்சி பலப்படுத்தப்படும். பொதுஜன பெரமுனவை நாட்டின் பலம் வாய்ந்த கட்சியாக தொடர்ந்தும் பேணுவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறோம்.” என்றும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்களை எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 04 முக்கிய தீர்மானங்களை அவர் தனது ‘X’ தளத்தில் இன்று புதன்கிழமை பதிவிட்டுள்ளார்.

அவை வருமாறு,

1.அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் உட்பட மாவட்ட/தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை நியமித்தல்.

2.வெற்றிகரமான மே தினப் பேரணியை நடத்தல்

3.மே தினத்திற்குப் பின்னர் மாவட்ட மற்றும் வெளிப்புற கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தல்

4.அரசியலமைப்பு விதிமீறல்களை கண்காணிக்கும் ஒழுங்குமுறைக் குழுவைச் செயல்படுத்தல்

இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சியால் பொதுஜன பெரமுன கடுமையான பின்னடைவை சந்தித்திருந்தது.

தற்போது இவர்கள் மீண்டும் கிராம மட்டத்தில் பொதுக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். தமது மக்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரமாண்டமான மே தினக் கூட்டத்தை இம்முறை நடத்தவும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...