காஸா மக்கள் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படும் நிலையில் பைடன் தனது x பக்கத்தில், குறிப்பொன்றை பதிவிட்டுள்ளார்.
“ஹமாஸினால் கடத்தப்பட்டு பணயம் வைக்கப்பட்டுள்ளவர்கள் பாதுகாப்பாக திரும்பும் வரை என்னால் அமைதியாக இருக்கவே முடியாது அனைத்து கடத்தப்பட்ட நபர்களும் தங்கள் அன்புக்குரியவர்களிடம் திரும்பும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
ரபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாசுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று இஸ்ரேல் தெரிவித்து போர் நிறுத்த முன்மொழிவை அளித்துள்ளது.
ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தின் போது 100-க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(அல் ஜஸீரா)