சுதந்திர பலஸ்தீனத்திற்காக பிரார்த்தனை செய்யும் இப்தார் வைபவம் நேற்று (07) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
இந்த இப்தார் விழாவில் அனைத்து மத தலைவர்களும், மாற்று சகோதரர்களும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக பலஸ்தீனத்திலிருந்து இந்நாட்டிற்கு வந்த மக்களும் கலந்துகொண்டதுடன் பலஸ்தீன தூதுவரும் இணைந்து கொண்டார்.
அதேவேளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள வீதிகளை துப்புரவு செய்யும் பணியாரளர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை விசேட அம்சமாகும்.