புத்தளம் மாவட்டத்தில் காதி நீதிபதியாக செயற்பட்டுவந்த முஹம்மத் காதியார் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யட்டார்.
இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் உறுதிப்படுத்தினார்.
விவாகரத்து வழக்கு தொடர்பில் 5000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதற்கமைய அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
புத்தளம் காதி நீதிபதியின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்வேறு விடயங்களை கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி வெளியிட்டிருந்தார்.
பலரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கமைய தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
புத்தளம் காதி நீதிமன்றத்தின் காதியார் பொறுப்பை ஏற்ற அன்றே நீதிக்கு தீர்ப்பு என்ற நடப்பு மாறி நிதிக்கு தீர்ப்பு என்று கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.