புத்தாண்டை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசி வழங்க நடவடிக்கை

Date:

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 2.75 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசியை பகிர்ந்தளிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக 20,000 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நலன்புரி மற்றும் ஏனைய உதவிகள் எதுவும் கிடைக்காத குடும்பங்களுக்கே இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து,நலன்புரி திட்டத்தின் கீழ், சுமார் 2.4 மில்லியன் குடும்பங்களுக்கு வருகின்ற ஜூலை மாதத்துக்குள் பல நன்மைகள் பெற்றுத்தரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளினால், மீட்டெடுக்க சுமார் பதினைந்து வருடங்களாகும்.

எனவே, பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என அனுராதபுரத்தில் நடந்த ஊடகச் சந்திப்பொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...