புத்தாண்டை முன்னிட்டு பல பொருட்களின் விலைகள் குறைப்பு!

Date:

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு  லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல வகையான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

அதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 850 ரூபாவாகும்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.

ஒரு கிலோ பூண்டு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 680 ரூபாவாகும் .

ஒரு கிலோ உருளைக்கிழங்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.

அத்துடன் சிகப்பு பருப்பின் விலையை 7 ரூபாவினாலும் வெள்ளை அரிசியின் விலையை 3 ரூபாவினாலும் குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...