புனித திருகுர்ஆனை தீயிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

Date:

புனித குர்ஆனை பலமுறை எரித்த ஈராக் நாட்டைச் சேர்ந்த சல்வான் மோமிகா நோர்வேயில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே(India Today) செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் பலமுறை இஸ்லாத்துக்கு எதிராக குர்ஆனை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு சர்சையில் சிக்கிய நபர் ஆவார்.

இவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இவர் பலமுறை சுவீடனில் அகதி அந்தஸ்து கோரிய போதிலும் சுவீடன் இவரது அகதித் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து அவரை நாடு கடத்த தயாராக இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

2023ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28ஆம் திகதி புதன் கிழமை சுவீ­டனின் ஸ்டொக் ஹோம் நகரில், அதுவும் பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு முன்னால் இனம் தெரியாத ஒரு நபரால் புனித குர்ஆன் தீக்கிரையாக்கப்பட்டது.

சுவீடன் பொலி­ஸாரின் அனு­மதி பெற்று நடத்­தப்­பட்ட எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­தின்­போது உலக முஸ்­லிம்­களை கொதித்தெழச் செய்யும் வண்ணம் அந்தக் கூட்டத்தில் இருந்த இருவர் குர்ஆன் பக்கங்களை கிழித்து, அதை கொண்டு தங்களது காலணிகளை துடைத்தனர். பின்னர் அதனை தீயிட்டு கொளுத்தினர்.

முஸ்­லிம்­களின் புனித குர்ஆன் எரிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக பெரும்­பா­லான நாடுகள் துருக்கியை தொடர்ந்து சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் கண்­டனம் தெரி­வித்திருந்தன.

முஸ்லிம் நாடுகள் தங்கள் நாடு­க­ளி­லி­ருக்கும் சுவீடன் தூதுவர்களை அழைத்து சுவீடன் மீதான தங்கள் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ள­துடன் இஸ்­லாத்­துக்கு எதி­ரான செயற்­பாட்­டினை வன்­மை­யாகக் கண்­டித்தன.

குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 37 வயதான வாலிபர் ஒருவரை சுவீடன் பொலிஸார் கைது செய்தனர். சல்வான் மோமிகா என்ற அந்த நபர், பல ஆண்டுகளுக்கு முன் ஈராக்கில் இருந்து தப்பித்து சுவீடனுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

குர்ஆனை எரிக்கும் போராட்டத்திற்கு சல்வான் போலீசாரிடம் அனுமதி கேட்டதுடன், சுவீடனில் குர்ஆனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார் எனவும் சுவீடன் அரசு ஊடகமான டச்சுஸ் வெல் (Deutsche Welle) செய்தி வெளியிட்டிருந்தது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...