இம்முறை புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் நாள் எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு அறிவிக்கப்படும்.
ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.