போருக்கு தயாராக வேண்டிய நேரம்: வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பால் பதற்றம்

Date:

வடகொரியாவின் அரசியல் சூழல்கள் பதட்டமாக உள்ளதாகவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் போருக்கு தயாராகி வருவதாகவும் வடகொரிய ஜனாதிபதி ஜிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் அமைந்துள்ள மிக முக்கியமான ராணுவ மற்றும் அரசியல் படிப்பு சார்ந்த கல்லூரியான கிம் ஜாங் இல்-யை ஜனாதிபதி ஜிம் காங் உன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு குறித்து பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் வடகொரியா போருக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வடகொரியா திட எரிபொருள் ஏவுகணை சோதனைய மேற்கொண்டது. இந்த ஏவுகணையானது திரவ எரிபொருள் ஏவுகணையை விட பல மடங்கு தாக்குதல் திறன் கொண்டது.

கடந்த சில மாதங்களாக ரஷ்யாவுடனான வடகொரியாவின் உறவு அதிக பலம் வாய்ந்ததாக மாறியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் உடனான போரில் வடகொரியாவின் நிலைப்பாடு இதை தெளிவாக வெளிப்படுத்தியது.

ராணுவ கல்லூரி ஆய்விற்கு பிறகு பேசிய ஜனாதிபதி ஜிம் ஜாங் உன், “வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வடகொரியாவிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம். ஆனால் இந்த முறை நடத்தப்படும் தாக்குதல் முன்னெப்போது இல்லாத அளவிற்கு மிக தீவிரமாக இருக்கும். இது போருக்கு தயாராக வேண்டிய நேரம்.” என அவர் கூறினார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...