மலேஷியா தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகர் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிக்கு விஜயம்!

Date:

மலேஷியா தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகர் பாதிழ் ஹிஷாம் பின் ஆதம் அவர்கள் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிக்கு வெள்ளிக்கிழமை மாலை (05) சினேகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

பெரிய பள்ளியின் கட்டடக்கலை வடிவமைப்பு மற்றும் பழைமை வாய்ந்த மணிக்கூடு போன்றவற்றை பார்வையிட்டதோடு கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினார்.

புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் சட்டத்தரணி இக்பால் உட்பட பெரிய பள்ளியின் நிர்வாகிகளும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் மற்றும் புத்தளம் வர்த்தக சங்க தலைவர் வை.எம்.நிஸ்தார் உட்பட இன்னும் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த உயர் ஸ்தானிகர்,

தன்னுடைய புத்தளத்துக்கான இவ்விஜயம் இத்துடன் நிறைவுபெறும் ஒன்றல்ல.

புத்தளத்துக்கும் மலேஷியாவுக்கும் இடையில் வர்த்தக பொருளாதார ரீதியான செயல்திட்டங்களை ஆரம்பிப்பதும் ஏற்றுமதி வர்த்தகத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் ஊக்குவிப்பதும் தன்னுடைய நோக்கமாகும்.

தொடர்ந்தும் புத்தளத்துக்கான எனது விஜயம் தொடரும் என கூறியதோடு, பள்ளியின் அபிவிருத்தி தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது மலேஷியா அரசாங்கம் ஊடாக தன்னால் முடியுமான உதவிகளை செய்ய முடியும் என்றும் கூறினார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...