இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று (29) மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (29) மாலை 6.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தங்கந்த பிரதேசத்தில் அன்றைய தினம் மாலை பெய்த மழையுடன் மின்னல்கள் தாக்கியதாகவும், அருகில் உள்ள பல வீடுகளில் மின் மீட்டர்கள், மின்விளக்குகள், தொலைக்காட்சிகள் சேதமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.