முஸ்லிம்களின் ஐக்கியத்துக்காகப் பாடுபட்ட இப்ராஹிம் மௌலவியின் ஜனாஸாவில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவை பங்கேற்பு!

Date:

முஸ்லிம் உலமாக்களின் ஒற்றுமைக்காக இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பை உருவாக்கியும் பின்னர் ஐக்கியப் பேரவை ஒன்றைத் தாபிப்பதில் பெரு முயற்சியும் எடுத்த மௌலவி இப்ராஹிம் அவர்களின் ஜனாஸாவில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்களான அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் அப்துல் முஜீப் கபூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற அகில இலங்கை சூபி ஆன்மீக பேரவையின் தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் அப்துல்லாஹ் நூரி ஸுபி காதிரி உட்பட பல அங்கத்துவ அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட ஒருவரின் இறுதித் தருவாயில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காக தற்போது அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவை சார்பில் தரீக்காவின் அங்கத்தவர்கள் உட்பட பல தரப்பினரும் கலந்து கொண்டது அன்னார் முன்னெடுத்த முயற்சிகள் வெற்றிபெறுவதைக் காட்டக் கூடியதாக உள்ளதாக இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் அங்கத்தவர்கள் பலரும் கருத்து வெளியிட்டனர்.

ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவரின் ஜனாஸாவில் கலந்து கொண்ட பேரவை அங்கத்தவர்கள் ஜமாஅத்தின் தற்போதைய தலைவர் அஷ்ஷெய்க் உஸைர் இஸ்லாஹியைச் சந்தித்து தமது அனுதாபங்களைத் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...