சர்வதேச மனித நேய அமைப்பான முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் UNHRC உடன் இணைந்து லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு 50 மில்லியன் ரூபா மதிப்பிலான லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை நேற்றுமுன்தினம் கையளித்தது.
இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன UNHCR தூதுக்குழுவின் தேசிய அலுவலகத் தலைவர் சஞ்சிதா சத்தியமூர்த்தி, லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர். ஜி.விஜேசூரிய, மற்றும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பைசர் கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் விஜேசூரிய கூறுகையில்,
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பெறுமதியான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதில் நிதி நெருக்கடிகள் காணப்படுவதாகவும், மருத்துவ உபகரணங்கள், மருந்து மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் பல்வேறு நன்கொடைகள் மூலம் தரமான சேவையை வழங்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நோயாளிகளின் சிகிச்சையின் போக்குகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகளுக்கான நீண்டகால தேவையை பூர்த்தி செய்வதற்காக லேப்ராஸ்கோபிக் முறையை வழங்கியதற்காக அவர் UNHRC மற்றும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும், வைத்தியசாலையில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு உபகரணங்களை மிகுந்த கவனத்துடன் கையாளுமாறு வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களை பணிப்பாளர் வலியுறுத்தினார்.
இதேவேளை முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் பணிப்பாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆதரவைப் பாராட்டியதுடன், நாட்டின் முக்கிய அரசாங்க மருத்துவமனைகளின் திறனை மேம்படுத்துவதற்கும் 10 ஆண்டுகளாக UNHRC பங்காளித்துவத்திற்கு நன்றி தெரிவித்தார்.
முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பைசர் கான் முன்னிலையில் UNHCR தூதுக்குழுவில் தேசிய அலுவலகத் தலைவர் சஞ்சிதா சத்தியமூர்த்தி அவர்களினால் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையிடம் மருத்துவ உபகரணங்கள் முறைப்படி கையளிக்கப்பட்டது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குன்வர்தன கூறுகையில்,
UNHRC மற்றும் முஸ்லிம் எய்ட் நிறுவனங்களின் மகத்தான ஆதரவிற்காக 50 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வைத்தியசாலைக்கு வழங்கி பயனுள்ள சுகாதார பராமரிப்பு மற்றும் சிகிச்சையை மேம்படுத்துவதற்காக அவர் பாராட்டினார்.
இதேவேளை மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து கொண்டு செல்லப்படும் குழந்தைகளின் நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்த இந்த மருத்துவ உபகரணங்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்று குழந்தை மருத்துவ சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர் லமாஹேவகே தெரிவித்தார்.