கொரோனா பரவலின்போது கட்டாய தகனம் செய்தமைக்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டு அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் தலைமையிலான ஆய்வு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நீர் தொழில்நுட்ப ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்க மையத்தின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் முந்தைய அரசாங்கத்தின் நிலைப்பாடு இப்போது சவாலுக்கு உட்படுத்தப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.