ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவரானார் நிமல் சிறிபால!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர குழுகூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது.

கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றிருந்தார்.

கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமை பதவியை வகிப்பதற்கு கொழும்பு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்திருந்தது.

இதனையடுத்தே, கட்சியின் அரசியல்குழு கூட்டம் அவசரமாக கூடப்பட்டு நிமல் சிறிபால டி சில்வா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீள கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறி வருகின்றார்.

மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளிலும் அவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

அதேவேளை, நீதிமன்றத்தில் தமது தரப்பு நியாயங்களை முன்வைத்து மீண்டும் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்பேன் என மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...