7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரம்: சிங்கள ஊடகம் வெளியிட்ட தகவல்

Date:

எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து மதுபானக் கடை அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாக ‘லங்காதீப’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், தென் மாகாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு உதவுவதாக உறுதியளித்ததன் பேரில் இந்த மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் அந்தந்த மாவட்ட விகாராதிபதிகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கம் இருநூறு புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் தெரியபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...