IMF தலைவராக கிறிஸ்டலினா மீண்டும் தேர்வு!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற  கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு நேற்று (12) அவர் தெரிவு செய்யப்பட்டார்.

அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே வேட்பாளர் இவர் எனவும், இந்த நியமனத்தை வழங்குவதற்கு முன்னர் அவருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது வலுவான மற்றும் சுறுசுறுப்பான தலைமை IMF செயற்குழுவினால் பாராட்டப்பட்டுள்ளது.

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த  ஜார்ஜீவா, 2019 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி  முதல் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்து வருகிறார்.

அதற்கு முன், அவர் ஜனவரி 2017 முதல் உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார்.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...