ஆசிரியர்களுக்காக விசேட வேலைத்திட்டம்: கல்வி அமைச்சர்

Date:

மேல் மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சைக்கு 2,400 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பரீட்சையில் சித்தியடைந்த ஏனைய ஆசிரியர்களுக்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் எனவும் ஏப்ரல் விடுமுறையின் பின்னர் அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழிநுட்பப் பிரிவுகளின் கீழ் 2,700 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான ஆசிரியர் பரீட்சை நிறைவடைந்துள்ளதாகவும் அவர்களின் பெறுபேறுகள் இந்த வாரத்தில் வழங்கப்படும் என்றும் இவர்களுக்கு கல்வி அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

மேலும் ஓய்வுபெற்று வெளிநாடு சென்ற ஆசிரியர்களுக்கு அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 13,000 வெற்றிடங்கள் தொடர்பில் புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...